×

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு

 

ஊட்டி, மார்ச் 20: ஊட்டியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜுன் மாதம் 4ம் தேதி நடக்கிறது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த 6 தொகுதிகளில் மொத்தம் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த ஆறு தொகுதிகளில் பாதிவாகும் வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பொட்டிகள் ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து வாக்குகள் எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு தேர்தலின் போதும், இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பெட்டிகள் ஸ்டராங் ரூம் எனப்படும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகள் தயார் செய்யப்படும்.

மேலும், ஆறு தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் அறைகள் ஆகியவை தயார் செய்யப்படும். வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், கலெக்டர் அருணா, எஸ்பி சுந்தரவடிவேல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வாக்குப்பெட்டிகள் வைக்கும் அறைகள், வாக்குகள் எண்ணும் அறைகள் ஆகியவைகளை விரைவாக தயார் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள், அரசியல் கட்சியினருக்கு தேவையான தண்ணீர் வசதிகள் மற்றும் கழிப்பிட வசதிகள் போன்றவைகளும் தயார் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், ஊட்டி கோட்டாட்சியர் மகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : SP ,Ooty ,Collector ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு...